2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 34° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அமெரிக்கா–ஈரான் மோதல் புதிய கட்டத்தை எட்டியது

உலகம்June 10, 2026 · 4 months முன்5
அமெரிக்கா–ஈரான் மோதல் புதிய கட்டத்தை எட்டியது

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் ‘அப்பாச்சி’ (Apache) உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு படைகள் தற்காப்புத் தாக்குதல்களை தொடங்கியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) இந்தத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து CENTCOM தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி உலங்கு வானூர்தி வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஈரான் மீது தற்காப்புத் தாக்குதல்களை (Self-defense strikes) எமது படைகள் தொடங்கியுள்ளன.

ஈரானின் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு நிகரான மற்றும் பொருத்தமான பதிலடியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.