2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

இந்தியா மகளிர் அணிக்கெதிராக அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி.

விளையாட்டுOctober 13, 2025 · 10 months முன்1

மகளிர் உலக கிண்ண போட்டியில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப் போட்டியில் நாணயற்சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியாது.

> இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 330 என்ற ஓர் பெரும் இலக்கை எட்டியது. துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணி சார்பில்,

– Smriti Mandhana 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

– Pratika Rawal 75 ஓட்டங்களையும், Harleen Deol 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

> அதற்கமைய 331 எனும் வெற்றி இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 49 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய மகளிர் அணி சார்பில்,

– Alyssa Healy 142 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

– Ellyse Perry 47 ஓட்டங்களை, Ashleigh Gardner 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

மேலும், இவ் வெற்றியுடன் அவுஸ்திரேலிய மகளிர் அணி மகளிர் உலக கிண்ண புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது.