“மூக்குத்தி அம்மன் 2” பர்ஸ்ட் லுக் வெளியானது !

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் “மூக்குத்தி அம்மன்”.
“மூக்குத்தி அம்மன்” இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்குவதோடு, வேல்ஸ் இன்டர்நெஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இப் படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.





