2026 September 12, Saturday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 32° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொரோக்கோவிலா? FIFA மறுப்பு!உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டயானாவின் கருப்பு ஆடை ஏலத்தில்!பொலன்னறுவையில் அநுர தலைமையில் விவசாயிகள் பேரணி!அநுர அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!எல் நினோ தீவிரம் – ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!கனமழை, இடி, மின்னல் – எச்சரிக்கையாக இருங்கள்!பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கை

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டயானாவின் கருப்பு ஆடை ஏலத்தில்!

பல்சுவைSeptember 12, 2026 · 48 minutes முன்1
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டயானாவின் கருப்பு ஆடை ஏலத்தில்!

மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்படும் கருப்பு நிற ஆடை ஏலத்திற்கு வரவுள்ளது.

1994ஆம் ஆண்டு, அப்போதைய இளவரசர் சார்லஸ் தன்னுடைய திருமணத்திற்கு வெளியான உறவை ஒப்புக்கொண்ட தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பான அதே இரவில், டயானா இந்த கருப்பு நிற “Christina Stambolian” ஆடையை அணிந்து பொது நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதன் காரணமாக இந்த ஆடை பின்னர் ‘Revenge Dress’ எனப் பிரபலமானது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள Sotheby’s ஏல நிறுவனத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த ஆடை ஏலத்திற்கு விடப்படவுள்ளது

இந்த ஆடை 150,000 முதல் 300,000 அமெரிக்க டொலர் வரை விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.