மகளிர் துடுப்பாட்டத்தில் – முன்னிலையில் மந்தனா !

ICC ஒருநாள் போட்டிகளுக்கான மகளிர்களுக்கான சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
மகளிர் உலக கிண்ண போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ICC யின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் தொடர்வது முக்கியத்துவம் பெறுகிறது.
791 புள்ளிகளுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடத்திலும், 731 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஷிவர் பிரண்ட் இரண்டாவது இடத்திலும் அவுஸ்திரேலிய அணியின் பெத் மூனி 713 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.




