2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி !

விளையாட்டுSeptember 24, 2025 · 11 months முன்0
இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி !

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நேற்று இடம்பெற்ற போட்டியில் (23) இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

> இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,

– கமிந்து மெண்டிஸ் மாத்திரமே அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

> பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில்,

– சஹின் ஷா அப்ரிடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், 134 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் இவ் வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது, அவ்விதமே இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இறுதிபோட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைந்த வண்ணம் காணப்படுகின்றது.