இலங்கை வந்தடைந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் தொடர்பாக கலந்துரையாடும் “நியேலினி” உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் “Song of Resilience” என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்னிந்திய தமிழ் சினிமாவின் உச்ச கலைஞர் பிரகாஷ் ராஜ் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மதியம் இலங்கையை வந்தடைந்தார்.
பிரகாஷ் ராஜ் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மதியம் இந்தியாவின் பெங்களூரிலிருந்து இண்டிகோ விமானம் 6E-1167 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்
அவரை வரவேற்பதற்காக பத்திரிகையாளர் தரிது உடுவரகெதர, திரைப்பட இயக்குனர் சமிந்த ஜெயசூரிய உட்பட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.