2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!

முட்டை உற்பத்தியாளர்களிடம் தொடரும் நெருக்கடி

உள்ளூர்September 7, 2025 · 11 months முன்2
முட்டை உற்பத்தியாளர்களிடம் தொடரும் நெருக்கடி

முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டைகளை இறக்குமதி செய்யச் சொல்லும் வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்கள், முட்டையின் விலை குறையும் போது, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஆர்.அழககூன் குறிப்பிட்டுள்ளார்.

முட்டையின் விலை சுமார் ஒரு வருடமாகக் குறைந்துள்ள நிலையில், முட்டைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை ஒப்பிடுகையில் குறையவில்லை என்று முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அதன்படி முட்டையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற கேக், முட்டை ரொட்டி, உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று டி.ஆர்.அழககூன் கூறியுள்ளார்.

தற்போது முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், பண்ணையில் இருந்து ஒரு முட்டை ரூ. 24-25க்கு சந்தைக்கு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

நாடு தற்போது முட்டை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.