2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

ODI பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் மகாராஜ் முதலிடம்.

விளையாட்டுAugust 21, 2025 · 1 year முன்2
ODI பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் மகாராஜ் முதலிடம்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மகாராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய நிலையில் அவர் இந்த தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 687 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

அதன்படி, இதுவரை பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இலங்கை அணியின் மகேஷ் தீக்ஷன ஒரு இடம் பின் தள்ளப்பட்ட நிலையில் 671 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐ.சி.சி. அணியின் தரவரிசைப்படி, ஒருநாள் பந்து வீச்சாளர்களில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்தையும், நமீபியா அணியின் பெர்னட் ஸ்கோல்ட்ஸ் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதே பட்டியலில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க 8வது இடத்திலும், துனித் வெல்லாலகே 32வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.