2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கிண்ணத்தை வாங்க மறுத்த இந்திய அணி.

விளையாட்டுSeptember 29, 2025 · 1 year முன்3
கிண்ணத்தை வாங்க மறுத்த இந்திய அணி.

ஆசிய கிண்ணத்தை வென்ற இந்திய அணி கிண்ணத்தை வாங்க மறுத்துள்ளது.

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கிண்ணத்தை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இந்திய வீரர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு 20 உலகக் கிண்ணப் போட்டியில் அப்போதைய இந்திய அணியின் தலைவர் ரோகித் கிண்ணத்தை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய அணியின் தற்போதைய தலைவர் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.

செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி.சி.ஐ. தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, “பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கிரிக்கெட் சபை தலைவரிடமிருந்து ஆசிய கிண்ணத்தை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கிண்ணம் இந்தியா கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.