2026 September 13, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 24° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியின் பிடியில்!இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை 15 இலட்சத்தை கடந்தது!ஜாவா கடலில் மாயமான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது!ஜாவா கடலில் மீட்பு நடவடிக்கை தீவிரம்!கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்!புதிய பொது முகாமையாளர் நியமனம் கோரும் தொழிற்சங்கங்கள்!தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு விரிவாகும்!சபாலெங்காவின் வெற்றித் தொடருக்கு முற்றுப்புள்ளி!

ஆசிய கிண்ணத்தை வென்றது இந்தியா.

விளையாட்டுSeptember 29, 2025 · 12 months முன்2
ஆசிய கிண்ணத்தை வென்றது இந்தியா.

17-வது ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.

> துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில்,

– Sahibzada Farhan அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும்,

– Fakhar Zaman 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

> இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் Kuldeep Yadav 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

> துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில்,

– அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Tilak Varma ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும்,

– Shivam Dube 33 ஓட்டங்களை பெற்றக்கொடுத்தனர்.

> பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Faheem Ashraf 03 விக்கெட்டிக்களை வீழ்த்தினார்.

17 வது ஆசியக்கிண்ணத்தின் இவ் வெற்றியுடன் இந்திய அணி 09வது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.