2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய பங்களாதேஷ்.

விளையாட்டுSeptember 17, 2025 · 11 months முன்1
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய பங்களாதேஷ்.

ஆசிய கிண்ண T20 தொடரின் குழு B யில் நேற்று ( 16) அபுதாபியில் உள்ள ஷேக் ஸயீத் மைதானத்தில் நடைபெற்ற 9வது போட்டியில், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இப் போட்டியில் பங்களாதேஷ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில்,

– தன்சிட் ஹசன் தமிம் 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில்,

– ரஷித் கான் (2/26) மற்றும் நூர் அகமது (2/23) தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில்,

– ரஹ்மானுல்லா குர்பாஸ் 35 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

பங்களாதேஷ் அணி பந்து வீச்சில்,

– முஸ்தஃபிசூர் ரஹ்மான் 28 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும், பங்களாதேஷ் அணியின் இந்த வெற்றி, பங்களாதேஷ் அணியின் (சூப்பர் 4) இல் முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ளது