2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

நீண்ட தூரப் பேருந்துகள் அடிப்படை தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்கத் திட்டம்

உள்ளூர்September 14, 2025 · 11 months முன்2

நீண்ட தூரப் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு முன்னதாக அடிப்படை தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறித்த செயல்முறையை அடுத்த மாத தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் முதல் கட்டமாக, கொழும்பிலுள்ள பெஸ்டியன் மாவத்தை மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தை மையமாகக் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. மேலும் நீண்ட தூர சுற்றுலாப் பேருந்துகளும் குறித்த தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 100 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகள், 48 மணி நேரத்திற்கு முன்பு தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும். இது தொடர்பான வழிமுறைகள் ஒரு சுற்றறிக்கை மூலம் வெளியிடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் கூறுகின்றது.