2026 October 24, Saturday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையை வீழ்த்திய இந்திய அணி – சூப்பர் ஓவரில் அதிரடி வெற்றி !

விளையாட்டுSeptember 27, 2025 · 1 year முன்3
இலங்கையை வீழ்த்திய இந்திய அணி – சூப்பர் ஓவரில் அதிரடி வெற்றி !

2025 ஆசிய கிண்ண டி20 போட்டித் தொடரில் சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதின மிகுந்த விறுப்பாக நடைபெற்ற போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

> இந்திய அணி சார்பில்,

– அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 61 ஓட்டங்களையும்,

– திலக் வர்மா ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

> இலங்கை அணி பந்து வீச்சில்,

– மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் சானக்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அதன்படி, பதிலுக்கு 203 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை 202 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமனிலையில் நிறைவடைந்தது.

> இலங்கை அணி சார்பில்,

– அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க 107 ஓட்டங்களைப் பெற்று இறுதியாக ஆட்டமிழந்தார்.

– குசல் ஜனித் பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

போட்டி சூப்பர் ஓவருக்கு சென்ற நிலையில்,அதன்படி, சூப்பர் ஓவரில் முதலில் களம் புகுந்த இலங்கை அணி 02 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி 03 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றிப் பெற்றது.