2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் மூவர் கைது!

உள்ளூர்February 2, 2026 · 6 months முன்0

மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் கடந்த 31ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 17 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் 03 சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அதன்படி, மன்னாரின் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் புவனேக நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று சோதனை செய்யப்பட்டது.

அதே நேரத்தில் சட்டவிரோத விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 17 கிலோகிராம் ஆமை இறைச்சி, 39 முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் 3 சந்தேகநபர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.