2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ICC கடும் எச்சரிக்கை!

விளையாட்டுFebruary 2, 2026 · 6 months முன்3
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ICC கடும் எச்சரிக்கை!

2026 டி-20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் புறக்கணிக்கப்படலாம் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டமானது அதிக வர்த்தக மதிப்பு கொண்ட போட்டி என்பதால், அதனை தவிர்ப்பது பாதிப்பாக அமையுமென ஐ.சி.சி. கருதுகின்றது.

மேலும், இது நியாயமான போட்டி, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் சமத்துவம் என்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தனது நிலைப்பாடு தொடர்பில் பாகிஸ்தான் ஐ.சி.சி.க்கு இன்னும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றது.

எனினும், முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டுமே பங்கேற்பது உலகக் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது.

ஐ.சி.சி போட்டிகள் விளையாட்டு நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சித் தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டவை.

2026 ஆண்கள் டி-20 உலகக்கிண்ணத்தை வெற்றிகரமாக நடத்துவது ஐ.சி.சியின் முதன்மை இலக்காகும்.

அதற்கான பொறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் உண்டு.

அனைத்து தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், பி.ஐ.சி பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை ஆராய வேண்டும்.” என்று கூறியுள்ளது.

போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.