2026 October 14, Wednesday ⛅ கொழும்பு 25° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

Super 8 சுற்று இன்று ஆரம்பம்!

விளையாட்டுFebruary 21, 2026 · 8 months முன்4
Super 8 சுற்று இன்று ஆரம்பம்!

20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று ஆரம்பமாகிறது. இன்று முதல் மார்ச் மாதம் 01ம் திகதி வரை சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த சுற்றில் அனைத்து அணிகளும் இரு குழுக்களின் கீழ் போட்டியிடவுள்ளதுடன் முதல் குழுவில் இந்தியா, சிம்பாம்பே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இடம்பிடித்துள்ளன.

இரண்டாவது குழுவில் இங்கிலாந்து, நியுசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.

இந்நிலையில் சுப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்றும் முதல் போட்டி நாளை (22) இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ளது. 2வது போட்டி 25ம் திகதி நியுசிலாந்து அணிக்கு எதிராகவும், 3வது போட்டி 28ம் திகதி பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் இடம்பெறும். தொடரின் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 8ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.