2026 October 14, Wednesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையில் இந்த ஆண்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

உள்ளூர்July 30, 2026 · 3 months முன்14
இலங்கையில் இந்த ஆண்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, இவ்வாண்டில் இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 84,091 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (29) எத்தகைய டெங்கு மரணங்களும் பதிவாகாத நிலையில், இவ்வருடத்தில் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 61 ஆகும். அதிகூடிய எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் 17,850 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 16,716 பேரும் பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய, மேல் மாகாணத்தில் மாத்திரம் 44,552 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், தென் மாகாணத்தில் இரண்டாவது அதிகபட்சமாக 12,656 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி நாட்டில் 175 அதி அபாய வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.