2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 29 இற்கு ஒத்திவைப்பு!

உள்ளூர்January 29, 2026 · 7 months முன்0

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு மொதர கடற்றொழில் துறைமுகத்தை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக, அன்றைய காலப்பகுதியில் கடற்றொழில் அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, திருத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.