2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கனவுப் பாடசாலை ஒன்றை நோக்கிய திட்டம்

உள்ளூர்January 29, 2026 · 7 months முன்0

இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

அந்தப் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதை வலியுறுத்திய பிரதமர், 2030ஆம் ஆண்டு வரை வருடாந்தம் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

‘கனவுப் பாடசாலை’ ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதனை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதன்போது மேலும் தெரிவித்தார்.

இன்று (29) அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் ஆரம்பமான, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தர மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வியை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது கூறினார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக நற்பண்புகள் மற்றும் பச்சாதாபம் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பிள்ளைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதிலிருந்து ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம், மனஅழுத்தம் இன்றி கல்வி கற்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.