2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

விளையாட்டுFebruary 7, 2026 · 6 months முன்0

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. 

மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 

தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. 

ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

பி பிரிவில் இலங்கை, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், சிம்பாப்வே அணிகளும் சி பிரிவில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாள், ஸ்கொட்லாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய அணிகள் டி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. 

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 

லீக், சூப்பர் 8, அரையிறுதி, இறுதி என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது. 

இந்த போட்டிகள் இலங்கையில் கொழும்பு எஸ்.எஸ்.சி, பிரேமதாச மற்றும் கண்டி பல்லேகல மைதானங்களிலும், இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி மற்றும் மும்பை, ஆகிய மைதானங்களிலும் இடம்பெறவுள்ளன.