2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

விமான நிலைய ஊழியர் தொழிற்சங்கங்கள் போராட்டம்

உள்ளூர்December 29, 2025 · 8 months முன்0

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களால் அறிவிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான முற்பணம் வழங்கல் தொடர்பாக, ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தின் 5 மாதங்களுக்குச் சமமான தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விமான நிலைய ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று (29) போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்தப் போராட்டத்தில் விமான நிலைய இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், பொது ஜன சேவகர் சங்கம், முற்போக்கு ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை விமான சேவையின் இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் முகந்திரம் அவர்கள் தெரிவிக்கையில், 2025 ஆம் ஆண்டிற்கான முற்பணம் தற்போது அடிப்படை சம்பளத்தின் இரண்டு மாதங்களுக்கு இணையான தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், விமான நிலைய நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 21 பில்லியன் நிகர லாபம் ஈட்டியுள்ள நிலையில் இது போதுமானதல்ல என்றும் குறிப்பிட்டார்.

எனவே, இந்தக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து குறைந்தபட்சமாக மேலும் இரண்டு மாதங்களுக்குச் சமமான அடிப்படை சம்பளத்தை முற்பணமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.