2026 October 26, Monday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஓமான் மீது இமாலய ஓட்ட எண்ணிக்கையை குவித்த இலங்கை

விளையாட்டுFebruary 12, 2026 · 9 months முன்13
ஓமான் மீது இமாலய ஓட்ட எண்ணிக்கையை குவித்த இலங்கை

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2026 டி-20 உலகக் கிண்ணத் தொடரின் 16-வது லீக் போட்டியில் ஓமான் அணிக்கு எதிராக இலங்கை அணி இமாலய ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். இது டி20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிவேக அரைசதமாகும்.

ஆரம்ப விக்கெட்டுகள் விரைவில் வீழ்த்தப்பட்ட போதிலும், குசல் மெந்திஸ் மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோர் பொறுப்புடன் ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். குசல் மெந்திஸ் 61 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க அரைசதத்தையும் கடந்தனர்.

தற்போது 226 என்ற பாரிய வெற்றி இலக்கை நோக்கி ஓமான் அணி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடத் தயாராகி வருகிறது.