2026 October 31, Saturday 🌧️ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

19 வயதுக்குட்பட்ட ஒருநாள் இளையோர் போட்டி – தென்னாபிரிக்காவை வீழ்த்திய இலங்கை அணி

விளையாட்டுJanuary 30, 2026 · 9 months முன்1
19 வயதுக்குட்பட்ட ஒருநாள் இளையோர் போட்டி – தென்னாபிரிக்காவை வீழ்த்திய இலங்கை அணி

19 வயதுக்குட்பட்ட ஒருநாள் இளையோர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 6 சுற்றில், நேற்று (29) நடைபெற்ற தீர்மானமிக்க போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சிம்பாப்வேயின் புலவாயோ நகரில் நடைபெற்ற இப்போட்டியில், தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை, 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் போட்டியின் 46 ஆவது ஓவரில் கடந்து இலங்கை அணி இந்த வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியுடன் இம்முறை உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கான நம்பிக்கையைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள இலங்கைக்கு முடிந்துள்ளது.

தொடரின் மற்றுமொரு தீர்மானமிக்க போட்டி இன்று (30) ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

அப்போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால், இலங்கையால் போட்டியின்றி அரையிறுதிச் சுற்றுக்கு நுழைய முடியும்.