2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பாகிஸ்தான் குழாமில் ஷகீன், பாபர் இல்லை.

விளையாட்டுDecember 29, 2025 · 8 months முன்0

இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் பாகிஸ்தானின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிக் குழாமில் ஷகீன் ஷா அஃப்ரிடி, பாபர் அஸாம், ஹரிஸ் றாஃப், மொஹமட் றிஸ்வான், ஹஸன் அலி ஆகியோர் இடம்பெறவில்லை.

இதில் குறிப்பிடப்பட்டவர்கள் அவுஸ்திரேலிய பிக் பாஷ் லீக்கில் பங்கேற்று வருகின்ற நிலையில், அதில் பங்கேற்று வரும் ஷடாப் கான் மாத்திரமே இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் புதுமுக துடுப்பாட்ட வீரரான காவாஜா நஃபேயும் குழாமில் முதற் தடவையாக இடம்பெற்றுள்ளார்.

குழாம்: சல்மான் அக்ஹா (அணித்தலைவர்), அப்துல் சமட், அப்ரார் அஹ்மட், பாஹீம் அஷ்ரஃப், பக்கர் ஸமன், காவாஜா நஃபே (விக்கெட் காப்பாளர்), மொஹமட் நவாஸ், மொஹமட் வாஸிம் ஜூனியர், நசீம் ஷா, சஹிப்ஸடா பர்ஹான் (விக்கெட் காப்பாளர்), சைம் உயூப், ஷடாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் காப்பாளர்), உஸ்மான்தாரிக்.