2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று தரத்தில் வீழ்ச்சி – மக்கள் எச்சரிக்கை

உள்ளூர்December 22, 2025 · 8 months முன்1

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களை உள்ளடக்கி, காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) தற்போது 150 முதல் 200 வரையிலான அளவில் பதிவாகியுள்ளது என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளரும் சுற்றாடல் நிபுணருமான கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக காற்றின் தரத்தில் தொடர்ச்சியான வீழ்ச்சி பதிவாகி வருவதாகவும், இந்த நிலை கவனத்திற்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு காற்றின் தரம் குறைவடைவது, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள உணர்திறன் கொண்ட நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்தார்.
மேலும், சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத்திணறல் அல்லது ஒவ்வாமை போன்ற அறிகுறிகள் தோன்றினால், தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.