2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அம்பாறை கடற்கரையில் உயிரிழந்த ஆமைகள் கரையொதுங்கிய சம்பவம்

உள்ளூர்December 22, 2025 · 8 months முன்0
அம்பாறை கடற்கரையில் உயிரிழந்த ஆமைகள் கரையொதுங்கிய சம்பவம்

அம்பாறை மாவட்டம், மருதமுனை மற்றும் கல்முனை இடையிலுள்ள கடற்கரையில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று மதியம் இந்த உயிரிழந்த ஆமைகளை கண்டுள்ளனர்.

ஆமைகள் சுமார் 3 அடி நீளமும், 25–50 கிலோ எடையுள்ளன. கடற்றொழிலாளர்கள் கூறும் படி, காலநிலை காரணமாக ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறக்கூடும்.

இதன்படி, இரு ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியதை அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

மேலும், இம்மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் அண்மையில் கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் உயிரிழந்து கரையொதுங்கிய நிகழ்வுகள் சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ளன.