2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சர்வதேச தரவரிசையில் புதிய சாதனை படைத்த சமரி!

விளையாட்டுSeptember 2, 2026 · 2 months முன்6
சர்வதேச தரவரிசையில் புதிய சாதனை படைத்த சமரி!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையைப் பெற்றுள்ளார்.

அவர் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீராங்கனைக்கான தரவரிசைகளில் ஒரே நேரத்தில் தனது அதிகபட்ச நிலையை அடைந்துள்ளார்.

நேற்று (01) வெளியிடப்பட்ட மகளிர் இருபதுக்கு இருபது தரவரிசையில், அவர் துடுப்பாட்டத் தரவரிசையில் 6ஆவது இடத்தையும், சகலதுறை தரவரிசையில் 3ஆவது இடத்தையும், பந்துவீச்சுத் தரவரிசையில் 33ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி இன்று இந்தோனேசியாவை எதிர்கொள்ளவுள்ளது.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8:00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.