2026 November 2, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ராஜீவ் காந்தி நினைவு கிரிக்கெட் கிண்ணத்தை வென்ற “ரிச்சஸ் லங்கா” அணி நாடு திரும்பியது

விளையாட்டுJanuary 17, 2026 · 10 months முன்5
ராஜீவ் காந்தி நினைவு கிரிக்கெட் கிண்ணத்தை வென்ற “ரிச்சஸ் லங்கா” அணி நாடு திரும்பியது

இந்தியாவில் நடைபெற்ற 51ஆவது ராஜீவ் காந்தி நினைவு, 19 வயதுக்குட்பட்டோருக்கான இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற “ரிச்சஸ் லங்கா” (Riches Lanka) கிரிக்கெட் அணி, அதில் சாம்பியன் பட்டத்தை வென்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியது.

தென்னிந்திய கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டித் தொடரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 14 அணிகள் பங்கேற்றன.

இப்போட்டிகள் கடந்த 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

இதன் இறுதிப்போட்டி தமிழ்நாடு குளோபல் இன்டர்நேஷனல் (Global International – Tamil Nadu) அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைச் சூடிக்கொண்டது.

வெற்றி பெற்ற இலங்கை அணியினர் இன்று அதிகாலை 12.10 மணியளவில் இந்தியாவின் சென்னையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-124 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.