2026 September 8, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
அமெரிக்கா–ஈரான் பதற்றம்: இலங்கை அருகே 47 கப்பல்கள்!விலங்குகளின் மொழியை புரிந்துகொள்ளும் AI தொழில்நுட்பம்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்!24 மாதங்களில் இரண்டாவது குற்றம்: பாத்திமா சனாவுக்கு அபராதம்!சட்டமன்ற நேரம் தனிமனித தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது – CPM கண்டனம்அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் நாளை அடையாள வேலைநிறுத்தம்!ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒக்டோபர் 02க்கு ஒத்திவைப்பு!ரூ.53.7 மில்லியன் போ#தைப்பொருளுடன் இரு தாய்லாந்து பிரஜைகள் கைது!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: இலங்கை அருகே 47 கப்பல்கள்!

உள்ளூர்September 8, 2026 · 36 seconds முன்0
அமெரிக்கா–ஈரான் பதற்றம்: இலங்கை அருகே 47 கப்பல்கள்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள போர் பதற்றத்திற்கு மத்தியில், இலங்கை கடல் எல்லைக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையில் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் கடல் எல்லையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் இந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

இந்தக் கப்பல்களில் ஈரானியக் கப்பல்களும் ஏனைய நாடுகளின் கப்பல்களும் அடங்குவதாகவும், அவை வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கப்பல்கள் எதுவும் இதுவரை இலங்கையிடம் எந்தவித வசதிகளையும் கோரவில்லை என்றும், இலங்கையும் அவற்றுக்கு எந்த வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் கடற்படையினர் இது குறித்து அவதானித்து வருவதாகவும், அரசாங்கம் இதில் எந்தவித தலையீடும் செய்யவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.