2026 September 9, Wednesday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ☀️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இலங்கையுடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ராஜ்நாத் சிங்!செம்மைப்படுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்!பாகிஸ்தானின் மிகக் குறைந்த T20 ஓட்ட எண்ணிக்கை!ஜனாதிபதி செயலகத்தில் ராஜ்நாத் சிங் சந்திப்பு!இலங்கையின் சுகாதார சாதனைக்கு சர்வதேச அங்கீகாரம்!நீர்கொழும்பு சிறை மோதல்: இந்தியப் பிரஜையின் உடல் அடக்கம்!வெள்ள பாதிப்புக்குப் பின் நேபாளத்தில் நிலநடுக்கம்!டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

உள்ளூர்September 9, 2026 · 2 hours முன்9
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

‘கொண்ட ரஞ்சி’ இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோதே கடந்த ஜனவரி 09 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் அவருடன் இணைந்து அவரது மனைவியும் குழந்தைகளும் கைது செய்யப்பட்டபோதிலும், பின்னர் மனைவியும் குழந்தைகளும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.