2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR

உள்ளூர்April 18, 2026 · 4 months முன்0

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகமானது QR முறையின்றி வழமைப் போன்று முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை, இரட்டை இலக்க முறைமை பின்பற்றப்பட்டதுடன், டீசல் வாகனங்களுக்கான QR முறைமை மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் QR முறைமையைச் செயற்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.