2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

உள்ளூர்April 18, 2026 · 4 months முன்1

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

துணை ஜனாதிபதி நாளை (19) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன், அங்கிருந்து அவர் பிரமுகர் வாகனப் பேரணியில் காலி முகத்திடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார். 

இதற்கமைய, அந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, இந்தியத் துணை ஜனாதிபதி குறித்த ஹோட்டலிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பயணிக்கவுள்ளதால், அப்பகுதியிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நாளை மறுதினம் (20) இந்தியத் துணை ஜனாதிபதி பயணிக்கும் வீதிகளை அண்டிய பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.