2026 October 13, Tuesday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

திட்டங்கள் தாமதமாவதற்கு நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு பற்றாக்குறையே காரணம் – ஜனாதிபதி.

உள்ளூர்July 29, 2026 · 3 months முன்3
திட்டங்கள் தாமதமாவதற்கு நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு பற்றாக்குறையே காரணம் – ஜனாதிபதி.

தற்போது 9% என்ற அளவில் உள்ள மீண்டெழும் செலவீனங்களைக் குறைத்து, 4% ஆக உள்ள மூலதனச் செலவீனங்களை உயர்த்தும் நோக்கில் எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

2027 ஆம் ஆண்டில் மூலதனச் செலவீனமாக இரண்டு ட்ரில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது சுமார் 40% அதிகரிப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

 

இதேவேளை, நிறுவனங்களுக்கு இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினால் சில திட்டங்கள் தாமதமடைந்துள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவனம் இங்கு திரும்பியுள்ளது.

 

மேலும், சிறுவர் காப்பகங்கள்/தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறும் சிறுவர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தி, அதன் நன்மைகளை அவர்களுக்கு வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.