2026 October 8, Thursday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நீதிபதிகள் ஓய்வு வயது விவகாரம்: இன்று சட்டத்தரணிகள் சங்க விசேட கூட்டம்!

உள்ளூர்July 29, 2026 · 2 months முன்6
நீதிபதிகள் ஓய்வு வயது விவகாரம்: இன்று சட்டத்தரணிகள் சங்க விசேட கூட்டம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட  பொதுச் சபை கூட்டம் இன்று (29) கொழும்பில் நடைபெறவுள்ளது.

 நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

 இதன்படி, இன்று காலை 11 மணிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

 “இது எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நீதிபதிக்கோ தொடர்பான பிரச்சனை அல்ல. இது நீதிமன்றத்தின் சுதந்திரம், அரசியலமைப்பின் கோட்பாடுகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பது தொடர்பான மிகவும் முக்கியமான தேசிய விடயமாகும். இவ்வாறான அடிப்படை அரசியலமைப்பு மாற்றங்கள், பரந்த அளவிலான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கலந்துரையாடல்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய நடைமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, இந்த முக்கியமான தேசிய விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களை இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இந்த  பொதுச்  சபை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கௌரவத்துடன் அழைக்கின்றேன்.”