2026 October 10, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நுவான் துஷாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வாபஸ்

விளையாட்டுApril 23, 2026 · 6 months முன்7
நுவான் துஷாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வாபஸ்

2026 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்  உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக, தமக்கு “தடையின்மைச் சான்றிதழை” வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி கிரிக்கெட் வீரர் நுவான் துஷாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

இதன்போது, ஐபிஎல் தொடரின் பல போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், இந்த கோரிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தமது கட்சிக்காரர் விரும்பவில்லை என்றும், எனவே மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.