2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

IPL தொடரில் முதல் போட்டிகளை தவற விடும் நுவான் துஷார

விளையாட்டுMarch 27, 2026 · 5 months முன்1

2026 IPL கிரிக்கெட் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடவிருந்த இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, தொடரின் ஆரம்பப் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வீரர்களுக்காக நடத்திய கட்டாய உடல் தகுதிப் பரிசோதனையில் நுவான் துஷார சித்தியடையத் தவறியதே இதற்குக் காரணமாகும்.

இருப்பினும், நுவான் துஷாரவிற்கு மீண்டும் ஒருமுறை உடல் தகுதித் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கு இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தேர்வில் அவர் சித்தியடைந்த பின்னரே பெங்களூரு அணியுடன் இணைந்துகொள்ள அனுமதி வழங்கப்படும்.