2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு – தொழிலுக்காக கொழும்பு வந்த இளைஞன் பலி!

உள்ளூர்February 15, 2026 · 6 months முன்1

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த என இளைஞர் தெரிய வந்துள்ளது.

குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும், சம்பவதினம் சிகை அலங்கரிப்புக்கு சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 20 வயதுடைய மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.