2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

யாழில்.ஆறாவது நாளாகவும் நீண்டு செல்லும் வரிசை

உள்ளூர்March 5, 2026 · 5 months முன்0

யாழ்ப்பாணத்தில் ஆறாவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமையும் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

ஆறாவது நாளாக இன்றைய தினம் வியாழக்கிழமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு போதுமான அளவு எரிபொருள் எடுத்து வரப்பட்டு தொடர்ந்து விநியோக நடவடிக்கைளை முன்னெடுத்து வரும் நிலையில் , தேவைக்கதிகமான நுகர்வு மற்றும் பதுக்கல் காரணமாக எரிபொருள் வரிசை குறையாது காணப்படுகிறது

அதேவேளை யாழ். மாவட்டத்தில் QR முறையினை பின் பற்ற மாவட்ட செயலர் வலு சக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.