2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 23° ☀️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஈரானின் இலக்கு பட்டியலில் நான் இருக்கிறேன்: பரபரப்பைக் கிளப்பிய டொனால்ட் ட்ரம்ப்!

உலகம்July 10, 2026 · 3 months முன்3
ஈரானின் இலக்கு பட்டியலில் நான் இருக்கிறேன்: பரபரப்பைக் கிளப்பிய டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் குறிவைத்து ஈரான் புதிய சதித் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் புதிய உளவுத் தகவல்களை அமெரிக்காவுடன் இஸ்ரேல் பகிர்ந்துள்ளதாக, விடயத்தை அறிந்த தரப்புக்களை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவல், வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விடயத்தை வாஷிங்டனிலுள்ள இஸ்ரேல் தூதரகம் மறுத்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள ஈரானின் நிரந்தர பிரதிநிதித்துவமும் இந்த விடயத்துக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

இதனிடையே, ஈரானின் இலக்கு பட்டியல்களில் ஒவ்வொன்றிலும் தான் இருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணித்து, அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக கட்டார், பாகிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய மத்தியஸ்த நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.