2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

சுவிட்சர்லாந்தில் வரலாற்று கையெழுத்து

உலகம்June 15, 2026 · 2 months முன்0

அமெரிக்காவுடனான சமாதான உடன்படிக்கை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடப்படும் என சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி தெரிவித்துள்ளார். 

இது தமது இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பல்வேறு இழுபறி நிலைமைகளுக்கு மத்தியில் அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தம் ஒன்றுக்கான தமது இணக்கப்பாடுகளை தற்போது வௌியிட்டுள்ளனர். 

இது தொடர்பில் கருத்துரைத்த டொனால்ட் ட்ரம்ப், இந்த மாபெரும் ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என அறிவித்துள்ளார். 

இரு தரப்பினரும் மற்றும் மத்தியஸ்த நாடான பாகிஸ்தானும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதும், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டதும் நீக்கப்படும் என்று கூறுகின்றனர். 

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ட்ரம்ப் மீது இருந்த அழுத்தத்தை குறைக்க இது ஓரளவுக்கு உதவும், அதே நேரத்தில் அமெரிக்க முற்றுகை நீக்கப்படுவது ஈரானின் சரிந்து வரும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என கூறப்படுகின்றது. 

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவிக்கையில், இந்த ஒப்பந்தம் லெபனான் உட்பட அனைத்து இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்த அழைப்பு விடுப்பதாகக் கூறியுள்ளார். 

இதனடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்த போரானது விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.