2026 October 10, Saturday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விளையாட்டுAugust 16, 2026 · 2 months முன்13
28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

2026 ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஜேர்மனியின் ஜூலியன் வெபர் தங்கம் வென்றுள்ளார்.

அவர் எறிந்த தூரம் 90.40 மீற்றராகும்.

ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஈட்டி எறிதல் போட்டியில் 90 மீற்றருக்கும் அதிகமான தூரம் பதிவு செய்யப்பட்டது இதுவே முதன்முறை என வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் பிரித்தானியாவின் ஸ்டீவ் பேக்லி 1998 ஆம் ஆண்டில் 89.72 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அதற்கமைய, ஜூலியன் வெபர் 28 ஆண்டுகள் பழமையான சாதனையை முறியடித்துள்ளார்.

அவரது இந்த 90.40 மீற்றர் திறமை, இந்த ஆண்டில் ஈட்டி எறிதல் வீரர் ஒருவர் பதிவு செய்த இரண்டாவது சிறந்த திறமையாகும்.

இது இலங்கையின் ருமேஷ் தரங்க பதிவு செய்த 92.62 மீற்றர் திறமைக்கு அடுத்தபடியாக உள்ளது.