2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி திரில் வெற்றி!

விளையாட்டுFebruary 25, 2026 · 6 months முன்2
பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி திரில் வெற்றி!

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் (குரூப் 2) 45-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சிறப்பாக ஆடி அதிகபட்சமாக 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய லியாம் டாசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

165 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு, ஷாஹீன் ஷா அஃப்ரிடி கடும் நெருக்கடி கொடுத்தார். அவரது சிறப்பான பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் சரிய, இங்கிலாந்து அணி தடுமாற்றத்தைக் கண்டது.

எனினும், மறுமுனையில் தனி ஒருவனாகப் போராடிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அவரது இந்த அபார சதத்தின் உதவியுடன், இங்கிலாந்து அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.