2026 September 20, Sunday 🌧️ கொழும்பு 27° ⛈️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்துமழையுடன் மண்சரிவு அபாயமும் – மக்கள் விழிப்புடன் இருங்கள்!பல பகுதிகளில் கனமழை – சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகம்!மோட்டார் வாகனப் பதிவு பிரச்சினைகளுக்கு புதிய WhatsApp இலக்கம்!வெளிநாட்டில் உள்ள பெசில் ராஜபக்ஷவை கண்டறிய சர்வதேச நடவடிக்கை!பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம் குறித்து சந்திரிகா உருக்கமான பதிவு!ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் – பிரதமர் அறிவுறுத்தல்!

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!

உலகம்September 20, 2026 · 57 seconds முன்0
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,377.91 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 66.25 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.