2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அதிரடித் திருப்பம்: தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி விலக தீர்மானம்!

விளையாட்டுApril 28, 2026 · 4 months முன்1
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அதிரடித் திருப்பம்: தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி விலக தீர்மானம்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட ஒட்டுமொத்த செயற்குழு உறுப்பினர்களும் தமது பதவிகளில் இருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.இன்று நடைபெற்ற விசேட செயற்குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சபையின் தலைவர் ஷம்மி சில்வா உட்பட செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டாகப் பதவி விலகுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.