2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

மகளிர் சர்வதேச டி-20 இல் அதிக விக்கெட்டுகள் – தீப்தி ஷர்மா சாதனை

விளையாட்டுDecember 31, 2025 · 8 months முன்3
மகளிர் சர்வதேச டி-20 இல்  அதிக விக்கெட்டுகள்  – தீப்தி ஷர்மா சாதனை

மகளிர் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை இந்தியாவின் தீப்தி ஷர்மா நிலைநாட்டினார்.

இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரம், கிறீன்பீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐந்தாவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் நிலக்ஷிக்கா சில்வாவை எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழக்கச் செய்து தனது 152ஆவது ரி20 விக்கெட்டை தீப்தி ஷர்மா கைப்பற்றினார்.

இதன் மூலம் மகளிர் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 151 விக்கெட்டுக்களை வீழ்த்திய அவுஸ்திரேலிய வீராங்கனை மெகான் ஷூட்டின் சாதனையை 28 வயதான தீப்தி ஷர்மா முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறினார்.

இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற 3ஆவது மகளிர் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் மெகான் ஷூட்டின் 151 விக்கெட்டுக்களை சமப்படுத்திய தீப்தி ஷர்மா அந்த சாதனையை முறியடித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2016ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டி மூலம் மகளிர் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அறிமுகமான தீப்தி ஷர்மா, இந்த 9 வருடங்களில் 133 போட்டிகளில் 130 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 19.00 என்ற சராசரியுடன் 152 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.