2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்ற அதிரடி உத்தரவு!

உள்ளூர்May 7, 2026 · 5 months முன்8
கபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்ற அதிரடி உத்தரவு!

பிணையில் வழங்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கையூட்டல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது, கையூட்டல் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதன் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்யுமாறு கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்து, வழக்கு விசாரணை முடியும் வரை அவரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.