2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!

உள்ளூர்June 30, 2026 · 2 months முன்0

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கை சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம் நாள், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் நேற்று (29) மாலை திறந்து வைக்கப்பட்டது.

மஹிந்த தேரர் இலங்கைத் தீவிற்கு வருகை தந்ததை நினைவுகூரும் மாதிரி வடிவம், பொசன் கூடுகள் கண்காட்சி, பக்தி கீத நிகழ்ச்சி மற்றும் தானசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த பொசன் வலயம் அமைந்துள்ளது.

மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கே.என்.எம். குமாரசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிறி பெரேரா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.