2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கொலம்பிய வானூர்தி விபத்து

உலகம்March 24, 2026 · 5 months முன்0

கொலம்பிய வான்படைக்குச் சொந்தமான சி-130 ஹெர்குலிஸ் (C-130 Hercules) ரக போக்குவரத்து வானூர்தி விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கொலம்பிய இராணுவ வீரர்கள் மற்றும் வான்படை ஊழியர்களை ஏற்றிச் சென்ற இந்த விமானம், பெரு (Peru) எல்லைக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

மீட்புப் பணிகளின் போது இதுவரை 66 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வானூர்தியில் 114 பயணிகளும் 11 பணியாளர்களும் இருந்ததாக கொலம்பியா வான்படைத் தரப்புகள் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.