2026 October 10, Saturday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

2027ஆம் நிதியாண்டுக்கான பாதீடு தயாரிப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

உள்ளூர்July 3, 2026 · 3 months முன்6
2027ஆம் நிதியாண்டுக்கான பாதீடு தயாரிப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

2027ஆம் நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீடுகளைத் தயாரிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பணிகள் 02/2026 இலக்க தேசிய பாதீட்டு சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, கட்டாய செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள செலவு எல்லைகளை அனைத்து அமைச்சுக்களும் அரச நிறுவனங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் பூர்வாங்க பாதீட்டு மதிப்பீடுகளுக்குள்ளேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பாதீட்டு மதிப்பீடுகள் மற்றும் அது சார்ந்த தரவுகளைச் சமர்ப்பிப்பதற்கு ‘ஒருங்கிணைந்த திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையை’ (ITMIS) பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களும் தங்களது பாதீட்டு மதிப்பீடுகளை இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தேசிய பாதீட்டு திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என நிதி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.